பொலிஸ் அரசியல் மயமாக்கலுக்கு முடிவு கட்டுவதற்கு, இலங்கையின் புதிய பொது பாதுகாப்பு அமைச்சர் உறுதியளித்துள்ளதுடன், இலஞ்சம் மற்றும் ஊழலைக் கட்டுப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.
பொலிஸின் சுதந்திரத்தை மீட்டெடுப்பதற்கு தாம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் புதிய பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜயபால நேற்று (20) செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
முந்தைய அரசாங்கங்களின் கீழ் பொலிஸ்துறை அரசியல் மயமாக்கப்பட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கை பொலிஸாரை அரசியல் செல்வாக்கிலிருந்து விடுவிக்க ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஏற்கனவே நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
இந்தநிலையில், இலங்கை பொலிஸார் பக்கச்சார்பற்ற, நியாயமான மற்றும் பொதுமக்களுக்கு பொறுப்புக்கூறும் வகையில் செயற்படுவதை உறுதி செய்வதில் தனது உறுதியான நிலைப்பாட்டை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply