கனடாவில் இந்த வாகனங்கள் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவில் போக்குவரத்தில் ஈடுபட்டு வரும் ஹைபிரிட் ரக வாகனங்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான ஹைபிரிட் ரக வாகனங்கள் சந்தையில் இருந்து மீள பெற்றுக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹொண்டா நிறுவனத்திற்கு சொந்தமான ஹைபிரிட்டாக வாகனங்கள் குறித்து இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

61000 ஹோண்டா ஹைபிரிட் ரக வாகனங்கள் இவ்வாறு வாபஸ் பெற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ளது உயர் அழுத்தம் காரணமாக எரிபொருள் தாங்கியில் ஏற்பட்ட கோளாரினால் எரிபொருள் கசிவடைந்து தீ பற்றி சொல்லக்கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் வாகன விபத்து அல்லது காயங்களோ ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ரக வாகனங்களே சந்தையில் இருந்து கனடிய சந்தையில் இருந்து மீள பெற்றுக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்படுகிறது.

இந்த வகை வாகனங்களை பதிவு செய்து கொண்டவர்களுக்கு நிறுவனம் தகவல்களை வழங்கியுள்ளது.