தேர்தல் காலத்தில் சிறு சிறு சம்பவங்கள் பதிவாகியதுடன், சுமார் 10 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டின் அண்மைக்கால வரலாற்றில் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்ற தேர்தல் இதுவாகும் என PAFRAL அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இம்முறை ஒரு வன்முறைச் சம்பவமே பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு வாக்குச் சீட்டுக் கிழிப்பு சம்பவங்களும், வாக்குச் சீட்டை வீடியோ பதிவு செய்த இரண்டு சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply