உள்ளிருந்து எதிராக செயற்படும் அமைச்சர்கள் தொடர்பில் ரணில் கடுமையான நிலைப்பாடு!

இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு ஆதரவளிக்காது கட்சியை பெயரளவில் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேறுமாறு ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தக் கோரிக்கையை பரிசீலித்ததன் அடிப்படையிலேயே நேற்று (05) உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் 4 இராஜாங்க அமைச்சர்களை பதவியில் இருந்து வெளியேற்ற ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர, மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த, விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹொன் பிரியதர்ஷன டி சில்வா, நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது