சஜித்தின் பிரசார கூட்டத்தை சர்வதேச கண்காணிப்பு குழு கண்காணிப்பு

வவுனியாவில் இடம்பெற்ற எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரசார கூட்டத்தின் போது ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

வைரவபுளியங்குளத்தில் இன்று (03.09.2024) இடம்பெற்ற பிரசார கூட்டத்தின் போது தேர்தல் பிரசார செயற்பாடுகள் மற்றும் கலந்து கொண்ட மக்களுடைய நடவடிக்கைகள் தொடர்பில் சர்வதேச கண்காணிப்பு குழு அவதானம் செலுத்தியுள்ளது.

அத்துடன், இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்களுடனும் கலந்துரையாடி கூட்டம் தொடர்பில் தகவல்களைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

மேலும், அவர்கள் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டுள்ளதுடன் தேர்தல் அரசியல்வாதிகளாலும், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவினாலும் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் தொடர்பிலும் குறிப்புக்களைஎ பெற்றுக்கொண்டுள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது