கொழும்பில் வீடொன்றுக்குள் சிறைப்பிடிக்கப்பட்ட நபர் – விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

கொழும்பில் வீடொன்றுக்குள் சிறைப்பிடிக்கப்பட்ட நபர் – விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

மாத்தறை சட்டத்தரணிகள் சங்கத்தின் அதிகாரிகள் சந்தேக நபருடன் தொலைபேசியில் உரையாடி, அவர் போலி மாவட்ட நீதிபதி மற்றும் போலி சட்டத்தரணி என காட்டிக் கொள்ளும் நபர் என பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

பொலிஸார் மேற்கொண்ட மேலதிக விசாரணையில் 20 வருடங்களுக்கு முன்னர் பொரளை பிரதேசத்தில் உள்ள இடமொன்றில் இருந்து இவர் இந்த போலி அடையாள அட்டையை தயாரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சட்டத்தரணி போல் காட்டிக்கொண்டு ஹோமாகம, பதுளை, குளியாப்பிட்டிய பிரதேச மக்களுக்கு சட்ட ஆலோசனை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, பலரை வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி பலரை ஏமாற்றி 60 லட்சம் ரூபாவை மோசடியாக பெற்றுக்கொண்டமையும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான கொடுக்கல் வாங்கல்கள் கெசல்வத்தை பொலிஸ் பிரிவில் அளுத்கடை நீதிமன்றத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது