யாழில் இளைஞனுக்கு நடந்துள்ள கொடூரம்

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் இளைஞன் ஒருவனை கடத்திச் சென்ற கும்பல் வாளால் வெட்டி சித்திரவதை செய்த சம்பவமொன்று நேற்று (26) இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சியில் இருந்து காதலியை பார்ப்பதற்காக யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதிக்கு இளைஞர் ஒருவர் வந்துள்ளார்.

இதன்போது அங்கு கூடிய இனந்தெரியாத நபர்கள் இளைஞனை முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்று தலை முடியை வெட்டி வாளால் உடலில் வெட்டி சித்திரவதை செய்துள்ளனர்.

இதன் பின்னர் குறித்த இளைஞனை உடுவில் பகுதியிலுள்ள வீதியொன்றில் போட்டுவிட்டு குறித்த கும்பல் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அப்பகுதியில் பரபரப்பான சுழல் ஏற்பட்டுள்ளதோடு இந்த இளைஞர்

பூநகரி கிராஞ்சியை சேர்ந்த இளைஞர் எனவும் படுகாயமடைந்த இளைஞன் பொலிஸாருக்கு நடந்த சம்பவத்தை தெரிவித்து விட்டு மயக்கமடைந்து உள்ளார்

படுகாயமடைந்த இளைஞனை நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது