பிரான்ஸில். கலங்கும் குடும்பம் ஈழத் தமிழ் இளைஞனின் விபரீத முடிவு

பிரான்ஸில் கிளிநொச்சி இளைஞன் காதலியுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் தற்கொலை செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

சம்பவத்தில் கிளிநொச்சி – உருத்திரபுரத்தை சேர்ந்த இளைஞரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

நான்கு வருடங்களுக்கு முன்னர் கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பிரான்ஸ் நாட்டிக்கு புலம் பெயர்ந்துள்ளார்

பிரான்ஸில் ஈழத் தமிழ் இளைஞனின் விபரீத முடிவால் கலங்கும் குடும்பம்

பிரான்ஸில் கிளிநொச்சி இளைஞன் காதலியுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் தற்கொலை செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

சம்பவத்தில் கிளிநொச்சி – உருத்திரபுரத்தை சேர்ந்த இளைஞரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

நான்கு வருடங்களுக்கு முன்னர் கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பிரான்ஸ் நாட்டிக்கு புலம் பெயர்ந்துள்ளார் .

பிரான்ஸில் ஈழத் தமிழ் இளைஞனின் விபரீத முடிவால் கலங்கும் குடும்பம்

யுவதியுடன் கருத்து முரண்பாடு
இளைஞரின் குடும்பம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் இளைஞனின் சகோதரன் பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகின்றது. அவரின் உதவியுடன் குறித்த இளைஞர் பிரான்ஸ் நாட்டுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் தரகர் ஊடாக மலையகத்தை சேர்ந்த யுவதி ஒருவருக்கு திருமணம் உறுதி செய்யப்பட்டுள்ளது . இதனையடுத்து யுவதியின் தேவைகளை இளைஞர் பூர்த்தி செய்ய , சுமார் ஒரு கோடி 80 லட்சம் ரூபா பணத்தை அனுப்பியதாக கூறப்படுகின்றது.

இளைஞன் அனுப்பிய பணத்தில் தனது சகோதரியின் திருமணத்தையும் யுவதி சிறப்பாக செய்து முடித்ததுடன் இந்தியாவுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றும் வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 23 ஆம் திகதி அன்று, இளைஞரும் யுவதியும் வீடியோ கோலில் பேசிக்கொண்டிருக்கையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக , யுவதியின் கண்முன் இளைஞர் விபரீத முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் இளைஞரின் இந்த டிவிடு அவரது குடும்பத்தினரிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *