இந்தியா டாக்கா: வங்கதேசத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்துக்கு அரசு பணியில் இடஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது. இதில் 32 பேர் பலியான நிலையில், 2,500க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த போராட்டத்தில் வங்கதேசத்தில் பெரும் பதற்றம் நிலவி வரும் சூழலில் போராட்டத்தின் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
தமிழகத்தின் அண்டை நாடாக வங்கதேசம் உள்ளது. வங்கேதசத்தின் பிரதமராக இருப்பவர் ஷேக் ஹசீனா. இவர் அவாமி லீக் கட்சியை சேர்ந்தவர். ஷேக் ஹசீனா இந்தியாவுடன் நல்லுறவை பேணி வருகிறார். இந்நிலையில் தான் தற்போது திடீரென்று வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் வெடித்து வன்முறை ஏற்பட்டுள்ளது.
Leave a Reply