சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை பிரிவுக்காக மட்டும் உலக மக்களிடம் தென்மராட்சி அபிவிருத்தி கழகத்தால் சேர்க்கப்பட்ட நிதிக்கு என்ன நடந்தது என கனடா தென்மராட்சி அபிவிருத்தி கழகத்தின் முன்னாள் சர்வதேச தலைவர் அகிலன் முத்துக்குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சாவகச்சேரியில் நேற்று(18/07/2024) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இந்த கேள்வியை எழுப்பினார்.
மேலும் தெரிவிக்கையில், சத்திர சிகிச்சை திட்டத்தை கூட ஏன் சரியாக நடத்த முடியவில்லை. ஆளணிப் பற்றாக்குறை உள்ள இடத்திற்கு எதற்கு உபகரணங்களை வழங்கினீர்கள்.
கறள் கட்டுவதற்கா? தென்மராட்சி அபிவிருத்தி கழகத்தினர் மின் பிறப்பாக்கியை வழங்கியிருக்கலாமே?வைத்தியர் அர்ச்சுனா சொன்னதை மிகைப்படுத்த வேண்டாம்.
தென்மராட்சி அபிவிருத்தி கழகத்தின் சர்வதேச கிளைகளில் உள்ள 23 மில்லியன் ரூபாய் பணத்தை தாயகத்திற்கு அனுப்பி புதிய நிர்வாகத்தினை பொதுமக்கள் பங்கேற்புடன் தெரியவேண்டும்.
தான்தோன்றித்தனமாக குறிப்பிட்ட சிலர் வேலைத்திட்டங்களை செய்யாது அனைத்து பொது மக்கள் கருத்தினை அறிந்து செய்யவேண்டும்.
சாவகச்சேரி வைத்தியசாலை நோயாளர் நலன்புரி சங்கத்திலும் தென்மராட்சி அபிவிருத்தி கழகத்தின் அங்கத்தவர்கள் பெரும்பாலும் ஒரே நபர்களே இருக்கின்றனர். இந்நிலை இதனை மாற்றம் செய்ய வேண்டும்.
சாவகச்சேரி வைத்தியசாலை நோயாளர் நலன்புரி சங்கம் கலைக்கப்பட வேண்டும் மக்கள் தீர்மானித்திற்கு மக்களின் ஏகமனதாக அது அவ்வாறே செய்யப்படவேண்டும் என கலாநிதி அகிலன் முத்துகுமாரசாமி குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply