வைர மோதிரம் கொள்வனவு செய்த கனடிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மெக்சிகோவில் கொள்வனவு செய்த வைர மோதிரம் போலியானது என தெரியவந்துள்ளது.

இந்த மோதிரத்தை குறித்த பெண்ணும் அவரது காதலரும் 4176 டொலர்களுக்கு கொள்வனவு செய்துள்ளனர்.

எனினும் நாடு திரும்பியதன் பின்னர் இந்த வைர மோதிரத்தின் பெறுமதி வெறும் 50 டாலர்கள் என தெரிய வந்துள்ளது.
தாம் ஏமாற்றப்பட்டது பெரும் வருத்தமளிப்பதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

போலியான முறையில் மெக்சிகோவில் வைர மோதிரம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் மெக்சிகோவின் கன்குன் பகுதிக்கு விடுமுறைக்காக இவர்கள் இருவரும் சென்றுள்ளனர்.

இதன்போது அங்கிருந்த ஆபரண கடை ஒன்றில் குறித்த வைர மோதிரத்தை கொள்வனவு செய்துள்ளனர்.
நாடு திரும்பியதன் பின்னர் இந்த மோதிரத்தை பரிசோதித்து பார்த்தபோது அது போலியானது என கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது