கனடாவில் நபர் ஒருவரின் மோசமான செயல்

கனடாவின் ஹமில்டன் பகுதியில் நபர் ஒருவர் வாகனங்களை சேதப்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பொலிஸார் இது தொடர்பிலான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர்.

சுமார் 36 வாகனங்களை குறித்த நபர் வாள் ஒன்றின் மூலம் தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் இவ்வாறு சேதப்படுத்தப்பட்டுள்ளன.

வாகனங்களை தாக்கி சேதப்படுத்தியதுடன் மக்களை தம்முடன் சண்டைக்கு வருமாறு இந்த நபர் அழைத்ததாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.