கனடிய பசுமைக் கட்சியின் இணைத் தலைவர் ராஜினாமா

கனடிய பசுமைக் கட்சியின் இணைத் தலைவர் ஜொனதன் பெட்னிலன்ட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஜொனதன், கட்சியின் மற்றுமொரு இணைத் தலைவரான எலிசபெத் மேயுடன் இணைந்து இந்தப் பதவியை வகித்து வந்தார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக ஜொனதன் அறிவித்துள்ளார்.

எலிசெபத் மே மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மைக் மோரிஸ் ஆகியோருடன் இணைந்து செயற்பட்டதனை கௌரவமாக கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.

கட்சியை மறுசீரமைப்பதற்கு பங்களிப்பு வழங்கியமை மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜொனதனின் தீர்மானம் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் அளிப்பதாக எலிசெபத் மே தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது