யாழ்ப்பாணம் கொழும்புத்துறைப் பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கொலைச் சம்பவம் கொழும்புத்துறை ஏவீ வீதி மூன்றாம் ஒழுங்கையில் உள்ள வீட்டில் இன்று(06.07.2024) இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில், திவிகரன் நிஷானி என்ற 29 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், உயிரிழந்த பெண்ணின் கணவர் சந்தேகத்தின் அடிப்படையில் யாழ். பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இந்த கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply