எலான் மஸ்க்கின் தவறை சீன சிறுமிசுட்டிக்காட்டியுள்ளார்

சீனாவைச் சேர்ந்த சிறுமி ஒருவர் டெஸ்லா காரில் உள்ள ஸ்கிரீனில் தான் விரும்பியதை படமாக வரைந்துள்ளார். அப்போது திடீர் திடீரென வரைந்த படங்கள் காணாமல் போகிறது.

இதனால் அந்த சிறுமி கவலை அடைந்தார். அத்துடன் இதை டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என விரும்பினார்.
தன்னுடைய செயலை ஒரு வீடியோவை எடுத்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு எலாஸ் மஸ்க் டேச் செய்துள்ளார். அதில் ஹலோ மிஸ்டர் மஸ்க், நான் சீனாவின் மோலியில் உள்ளேன்.

என்னுடைய கேள்வி உங்களுடைய கார் பற்றியது. நான் படம் வரையும்போது, சில நேரங்களில் லைன் இது போன்று (வீடியோவை காட்டி) மறைந்து விடுகிறது. நீங்கள் இதை பார்க்கிறீர்கள் அல்லவா? இதை சரி செய்ய முடியுமா? நன்றி” என அதில் குறிப்பிட்டுள்ளார்.


இந்நிலையில் சிறுமியின் பதிவை கவனித்த எலான் மஸ்க், “நிச்சயமாக” என சிறுமிக்கு பதில் அளித்துள்ளார்.