உத்தரபிரதேச மாநிலத்தில் இடம்பெற்ற மத நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 121 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் குழந்தைகள் ஆவர்.
ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா பேச்சைக் கேட்க கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி நெரிசலில் சிக்கி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஹத்ராஸ் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரஷிய அதிபர் புதின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஹதராஸ் சம்பவம் தெடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரமர் மோடிக்கு ரஷிய அதிபர் புதின் இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார்.
https://twitter.com/RusEmbIndia/status/1808422025712500823/photo/1?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1808422025712500823%7Ctwgr%5E7560986b6b813ae99aff7dc3164ffebda129c203%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fcanadamirror.com%2Farticle%2Fup-religious-event-crowd-121-died-putin-condolence-1720007101
என்பது குறிப்பிடத்தக்கது தொடர்ந்து எமது ஈழமுரசு செய்திகளுடன் இணைந்திருங்கள் இது போன்ற செய்திகளை தருவதற்கு நாம் என்றும் உங்களுடன்
Leave a Reply