லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பின் பெயரை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியிலிலிருந்து அரபு நாடுகளின் கூட்டமைப்பான அரபு லீக் நீக்கியுள்ளது.
ஹிஸ்புல்லாக்களை பயங்கரவாதிகள் என்று அழைப்பதால் அவா்களுடன் தகவல் தொடா்பை ஏற்படுத்திக்கொள்ள முடியாத நிலை உள்ளதாக, அரபு நாடுகளின் கூட்டமைப்பின் துணைப் பொதுச் செயலாளர் ஹோஸம் ஸாகி தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக பயங்கரவாத அமைப்புகள் பட்டியலிலிருந்து ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினரை நீக்க உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்டுள்னதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஹிஸ்புல்லா படையை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சோ்த்திருந்ததாகவும், இது தங்கள் தீா்மானங்களிலும் எதிரொலித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை எகிப்து, சவூதி அரேபியா, லெபனான், சிரியா உள்ளிட்ட 22 நாடுகளை உறுப்பினா்களாகக் கொண்ட அரபு லீக், ஈரானால் உருவாக்கப்பட்ட ஹிஸ்புல்லா படையினரை பயங்கரவாதிகளாக கடந்த 2016 ஆம் ஆண்டு அறிவித்திருந்தனர் அதற்கு பின்னர் தற்போது அந்த அமைப்பு பயங்கரவாத தடைச் சட்டத்தின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
Leave a Reply