ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் உலக கிண்ண தொடரில் இந்தியாவுக்கு இலங்கை மதிப்பில் 45.6 மில்லியன் ரூபாவை பரிசாக வழங்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தீர்மானித்துள்ளது.
பார்படொஸ், ப்றிஜ்டவுனில் கடந்த 29ஆம் திகதி நடைபெற்ற தென் ஆபிரிக்காவுக்கு எதிரான மிகவும் விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் இந்தியா 7 ஓட்டங்களால் பரபரப்பான வெற்றியை ஈட்டி 17 வருடங்களின் பின்னர் மீண்டும் உலக செம்பியனானது.
இதன் மூலம் மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து ஆகியவற்றைத் தொடர்ந்து இரண்டு தடவைகள் ரி20 உலக சம்பியனான 3ஆவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுக்கொண்டது.
அத்துடன் இந்த சாதனையை படைத்த முதலாவது ஆசிய நாடு என்ற பெருமையையும் இந்தியா தனதாக்கிக்கொண்டது.
இது தொடர்பில் பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்தை இந்த வருடம் வென்றெடுத்ததற்காக இந்திய அணிக்கு (இந்திய நாணயப்படி)125 கோடி ரூபா பரிசுத் தொகையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்
உலக செம்பியனான இந்திய அணியினர், ரி20 உலகக் கிண்ணப் போட்டி முழுவதும் அதிசிறந்த ஆற்றல்கள், மனஉறுதி, விளையாட்டுத்திறன் ஆகியவற்றை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த மகத்தான சாதனைக்காக வீரர்கள், பயிற்றுநர்கள் மற்றும் உதவி ஊழியர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் உரித்தாகுக.’ என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.” என தெரிவிக்கவுள்ளார்.
மேலும், 2024 ஆம் ஆண்டு பார்படாஸில் நடந்த டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஓய்வு பெறுவதாக அறிவித்த ராகுல் டிராவிட் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.
உலக சாம்பியனான இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டின் கடைசி போட்டியும் இதுதான்.
இதுவரை, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் வெற்றிகரமான பேச்சுகள் சமூக ஊடக தளங்களில் வெளியாகியது.
தற்போது ராகுல் டிராவிட்டின் உணர்ச்சிபூர்வமான பிரியாவிடை உரையை இந்திய கிரிக்கெட் வாரியம் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளது.
Leave a Reply