மட்டக்களப்புக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை விஜயம் செய்த ஜே.வி.பியின் தலைவர் மட்டக்களப்பில் பிள்ளையான் மக்களை அச்சுறுத்துவதாக தெரிவித்தமை தொடர்பாக ஊடகவியலாளர் கேள்வியெழுப்பியமைக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
ஜேவிபி கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயகக்க தான் முதலில் எங்களுக்கு ஆயுதம் வழங்கியவர்கள், பின்பு எங்களிடம் மக்களை சுடுவதற்கென ஆயுதம் கேட்டார்கள்.
நான் அவர்களுக்கு ஆயுதம் கொடுக்கவில்லை இவையெல்லாம் அந்த கட்சியில் வேறு ஒருவர் தலைவராக இருந்தபோது இடம்பெற்றது.
மக்களை நான் அச்சுறுத்துவதாகச் சொன்னால் மட்டக்களப்பில் அதிக வாக்குகளை பெற்றவர் நான். ஜனநாயகத்தைப் பற்றி கதைப்பவர்கள் பொறுப்பாக யோசித்து கதைக்க வேண்டும்.
நாட்டை தீக்குளிக்குள் தள்ளி பல்கலைக்கழக மாணவர்களை வன்முறைக்கு தூண்டும் ஒரு கட்சி, நாட்டை அழிக்க செய்த ஒரு கட்சி எமது மண்ணில் இவ்வாறு கதைப்பது வேதனைக்குரிய விடயம் என தெரிவித்தார்.
Leave a Reply