புடவைக்கடை மீது பெற்றோல் குண்டு வீச்சு!

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் உள்ள புடவைக்கடை ஒன்றின் மீது, நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இனம் தெரியாத நபர்கள் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

 

மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் , புடவைக்கடைக்கு பின் புறமாக வந்து பெற்றோல் குண்டுகளை வீசி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

அதனை அவதானித்த கடை ஊழியர்கள்  அப்பகுதியில் நின்றவர்கள் பெற்றோல் குண்டை வீசியவர்களை துரத்தி சென்ற போதிலும் , அவர்கள் தப்பியோடி விட்டனர்.

சம்பவம் தொடர்பில் கடை உரிமையாளரால் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *