மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் பெண்ணொருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பி சென்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அதேவேளை துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான பெண் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தானகுடி, இலாஹா வீதி, பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்த குடும்ப பெண்ணான 32 வயதுடைய சித்தீக் சிபானியா எனும் பெண்ணின் மீது நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெண்ணின் கணவர் அவுஸ்ரேலியாவில் வசித்து வரும் நிலையில் பெண்ணும் , அவரது மகனும் அந்த வீட்டில் வசித்து வந்துள்ளனர். அந்நிலையில் நேற்றைய தினம் அவர்களது வீட்டுக்கு வந்த துப்பாக்கி தாரி பெண்ணின் மீது சரமாரியாக துப்பாக்கி பிரயோகம் செய்து விட்டு தப்பி சென்று இருந்தார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த காத்தான்குடி பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சந்தேகத்தில் நபர் ஒருவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Leave a Reply