தமிழர்களின் வாக்குகளை பெறவே வடக்குக்கு ஜனாதிபதி வந்துள்ளார்!

தமிழ் மக்களின் வாக்குகளை பெறும் நோக்கிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

 

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான நிர்வாக தெரிவு, கூட்டுறவாளர் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது, யுத்தம் முடிந்த பின்னரும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் இதுவரை தீரக்கப்படாமல் உள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

இந்நிலையில், ஜனாதிபதியின் வடக்கின் விஜயம் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்சதற்காகவே அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

குறித்த கூட்டத்தில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரன், ரெலோ இயக்கத்தின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் குருசாமி, மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சியின் பிரதிநிதிகள் போன்றோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.