யாழில் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்து நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை  உயிரிழந்துள்ளார்.

ஊரெழு கிழக்கை சேர்ந்த சிங்காரத்தினம் சசிக்குமார் (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார்.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.