திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நால்வரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறிய குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் உள்ளிட்ட மூன்று பெண்களும் ஒரு ஆணுமாக நான்கு பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை சம்பூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மூதூர் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டமையை அடுத்து மன்றின் உத்தரவுக்கமைய 27 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் நகர்த்தல் பத்திரம் மூலம் குறித்த வழக்கு மீண்டும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை எடுக்கப்பட்ட போது, பொலிஸார் பிணையை ஆட்சேபிக்காதநிலையில் நால்வரையும் தலா ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இதேவேளை கஞ்சி காய்ச்சுவதற்காக மூதூர் நீதிமன்றினால் விதிக்கப்பட்ட தடை நேற்றைய தினம் வியாழக்கிழமை நீக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Leave a Reply