விடுதலைப்புலிகள் மீதான இந்தியாவின் தடை நீடிப்பு நேர்மையற்றது: இயக்குனர் கௌதமன் குற்றச்சாட்டு

விடுதலைப்புலிகள் மீதான தடை நீட்டிப்பு மூலம் சீன அரசுக்கு இந்திய அரசு உதவி செய்துள்ளதாக இயக்குநர் கௌதமன் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் விடுதலைப்புலிகள் மீதான இந்திய அரசாங்கத்தின் தடை நீடிப்பு நேர்மையற்ற மற்றும் அறமற்ற ஒரு செயல் என இயக்குநர் கௌதமன்

கடந்த ஜந்து ஆண்டுகளுக்கு முன்னர், விடுதலைப்புலிகள் வன்முறை இயக்கம் அல்ல என ஜரோப்பிய யூனியன் சுட்டிக்காட்டி, விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கியுள்ள நிலையில், இந்திய அரசாங்கம் மேலும் 5 வருடங்களுக்கு தடையை நீடித்துள்ளதன் மூலம் இந்திய அரசாங்கம் சீனாவிற்கே பாரிய அனுகூலத்தினை வழங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் இந்தியாவுக்கு எதிராக இந்தியாவே விதித்துக் கொண்ட தடையே இதுவென இந்தியா உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் திட்டமிட்ட தமிழின அழிப்பு நடந்து முடிந்து, 15 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், இந்தியாவிலோ அல்லது உலகிலுள்ள எந்தவொரு நாட்டிலோ விடுதலைப்புலிகள் அமைப்பினால் சிறியதொரு அசம்பாவிதம் கூட இதுவரை நடைபெறவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் நாட்டின் மீது பழியைப் போட்டு இந்திய அரசாங்கம் இந்த தடையினை நீடித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தற்போது, இலங்கையிலுள்ள சிங்களப் பகுதியில் மட்டுமல்ல வடக்கு கிழக்கிலும் கச்சத்தீவிலும் சீனர்களின் அத்துமீறல் ஆக்கிரமிப்பு பெருகிக்கொண்டே வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே ஒருநாள் இந்துமா கடல் சீனாவின் வசமாகும் போது இந்தியா இந்த தடை குறித்து கரிசனை கொள்ளும் என்றும் இயக்குநர் கௌதமன் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது