தரமற்ற மருந்துப் பொருள் இறக்குமதி மோசடி தொடர்பில் இன்னுமொருவர் கைது!

தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின்(Keheliya Rambukwella) பதவிக் காலத்தில் நடைபெற்ற மனித பாவனைக்குதவாத மனித இம்யூனோகுளோபுலின் உள்ளிட்ட தரமற்ற மருந்துப் பொருள் இறக்குமதி தொடர்பில  தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியான மருத்துவர் விஜித் குணசேகரவே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தரமற்ற மருந்துப் பொருள் இறக்குமதி தொடர்பில் இன்று(08) காலை தொடக்கம் சுமார் பத்து மணிநேரம் அளவில் அவரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்கள பொலிஸார் நீண்ட விசாரணையொன்றை மேற்கொண்டிருந்தனர்.

அதன் முடிவில் குறித்த சம்பவத்துடன் இலங்கை தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியானமருத்துவர் விஜித் குணசேகரவுக்கும் தொடர்பு இருப்பதாக நம்பகமான சாட்சியங்கள் கிடைத்திருந்த நிலையில் அவர் தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்கள பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.