கனடியர்களின் அலைபேசிகளுக்கு இன்றைய தினம் அவசர எச்சரிக்கை தகவல் கிடைக்கப் பெறவுள்ளது.மத்திய அரசாங்கம் இந்த அவசர எச்சரிக்கை தகவலை அனுப்ப உள்ளது.பரீட்சார்த்த அடிப்படையில் இந்த தகவல் அனுப்பி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
கனடாவில் அவசர நிலைமைகளின் போது இவ்வாறு அலைபேசிகளுக்கு அவசர எச்சரிக்கை செய்தி அனுப்பி வைக்கப்படுவது வழமையானது.
இந்த எச்சரிக்கை செய்தி அனுப்பும் முறைமை சீரான முறையில் தொழிற்படுகின்றதா என்பதனை பரீட்சிப்பதற்காக இவ்வாறு இன்றைய தினம் பரீட்சார்த்த அடிப்படையில் எச்சரிக்கை செய்தி அனுப்பி வைக்கப்பட உள்ளது.
Leave a Reply