நிபந்தனையை மீறினால் இலங்கைக்கு காத்திருக்கும் நெருக்கடி!

IMF நிபந்தனைகளை மாற்றினால் நாடு இரு வாரங்களில் வங்குரோத்தடையும் என்று போக்குவரத்து, ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன(Bandula Gunawardena) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

2022 ஆம் ஆண்டு நாடு பாரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தது. எரிபொருள், சமையல் எரிவாயு இன்றி நாடு எதிர்கொண்ட நெருக்கடியிலிருந்தும் தேசிய அழிவிலிருந்தும் அதனை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் கடன் உடன்படிக்கைக்கு சென்றது.