பொலிஸார் முன்னிலையில் பொது மக்களை அச்சுறுத்திய பிள்ளையான் கும்பல்!

மட்டக்களப்பு – மயிலத்தமடு, மாதவனை ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட பண்ணையாளர்களிடம்  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மே தினப் பேரணி மோட்டார் சைக்கிள் அணியினர் அச்சுறுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மாதவனையில் நடைபெற்ற வீதியால் வந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மே தினப் பேரணியில் வந்த ஆதரவாளர்களே இவ்வாறு நடந்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதேவேளை பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருந்த பொலிஸார், விசேட அதிரடிப் படையினருக்கு முன்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மோட்டார் சைக்கிள் அணியினர் நடந்து கொண்ட காட்சிகள் யுத்த காலத்தை நினைவுபடுத்துவதாக மக்கள கவலை வெளியிட்டுள்ளனர்.