கனேடிய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!

கனேடிய பொருளாதாரத்தில் சிறிதளவு மாற்றம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் புள்ளிவிபரவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த தகவலின் அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.5 வீதமாக அதிகரித்திருந்தது.

மேலும், கடந்த பெப்ரவரி மாதம் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.2 வீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் கடந்த மார்ச் மாதத்திலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாரியளவு மாற்றங்கள் பதிவாகாது என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதத்தில் மொத்தமாக 20 துறைகளில் 12 துறைகளில் வளர்ச்சி பதிவாகியுள்ளதாக கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.