காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட 28 வயதுடைய ஆண் என்பதுடன் எதிர்வரும் 14 ம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று(30) உத்தரவிட்டுள்ளார்.
இதில் கைது செய்யப்பட்டவர் திருமணமான ஒரு பிள்ளையின் தந்தையும் இவர் மனைவியுடன் பிரிந்து வாழ்ந்துவருவதாகவும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டு கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளதுடன் 3 வழக்குகளுக்கான நீதிமன்ற பிடிவிறாந்துள்ளவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Leave a Reply