கட்டுநாயக்க விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்(Bandaranaike International Airport) கடமையில் ஈடுபட்டிருந்த  விமானப்படை வீரர் ஒருவரின் துப்பாக்கியொன்று செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் இன்று (30) காலை 10.25 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

சம்பவத்தில் விமானப்படை வீரரின் கையிலிருந்த T-56 ரக துப்பாக்கியே தவறுதலாக செயற்பட்டுள்ளதாகவும் இதனால் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுகின்றது.