சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற நிலையில் மலையில் உச்சியில் இருந்து கீழே குதித்து காணாமல் போயிருந்த இளைஞன் மூன்று நாட்களின் பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
சூரியவெவ பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான தினேஷ் ஹேமந்த என்ற இளைஞரே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
சிவனொளிபாத மலை வனப்பகுதிக்கு அருகில் உள்ள நல்லதன்னி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரே தோட்டத்தின் ராஜமலை பகுதியில் இன்று (24) காலை இளைஞன் கண்டுபிடிக்கப்பட்டு தோட்ட தொழிலாளர்கள் குழுவினால் நல்லதண்ணி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
Leave a Reply