தமிழகத்தில் தஞ்சம் அடைந்த இலங்கைத் தமிழர்கள்!

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இலங்கையின் மட்டக்களப்பு (Batticaloa) பகுதியைச் சேர்ந்த சிவனேஸ்வரன், கஜேந்திரன் மற்றும் அவரது எட்டு வயது மகன் உள்ளிட்ட 3 நபர்கள் தனுஷ்கோடிக்கு அடுத்த ஐந்தாம் மணல் தீடையில் இன்று (22) காலை தஞ்சம் அடைந்துள்ளதாக இராமேஸ்வரம் மரைன் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்