கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரண்டு பெண்கள் கைது!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (Bandaranaike International Airport) இரண்டு கோடி ரூபா பெறுமதியான போதை மாத்திரைகளுடன் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது, இன்று (20.04.2024) போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் இரு பெண்களிடமும் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் போதை மாத்திரைகளை உடலில் மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டுள்ளது.