இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் மோசடி செய்யும் நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
சுற்றுலா பயணிகளிடம் அதிகளவான கட்டணங்கள் அறவிடும் ஆட்டோ சாரதிகள் மற்றும் வாடகை வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடமிருந்து பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான சட்டதரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
Leave a Reply