அன்னை பூபதியின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி வவுனியாவை வந்தடைந்த நிலையில், அவருடைய திருவுருவப்படத்துக்கு மக்கள் அஞ்சலி வெலுத்தியுள்ளனர்.
நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 36ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி இன்று (16.04) வவுனியாவை வந்தடைந்துள்ளது.
மேலும், தமிழ்த் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்த அன்னை பூபதியின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி வடக்கு – கிழக்கின் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ளது.
Leave a Reply