ஒன்றாரியோ மாகாணத்தில் ரயிலில் பொதுப் போக்குவரத்தில் ஈடுபடுவோருக்கு மகிழ்ச்சியான செய்தியொன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
மாகாண முதல்வர் டக் போர்ட் இந்த விடயத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.GO Transit போக்குவரத்து சேவை வாரந்தம் 300 புதிய ரயில் சேவைகளை ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்த மாத இறுதிக்குள் இவ்வாறு ரயில் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2013ம் ஆண்டின் பின்னர் மாகாணத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அதி கூடிய போக்குவரத்துப் பயணங்கள் இந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Leave a Reply