குரோதி வருடப்பிறப்பை முன்னிட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றுள்ளது.விசேட பூஜை வழிபாடுகள் இன்று (14.4.2024) காலை நல்லூர் ஆலயத்தில் இடம்பெற்றுள்ளது.பூஜைகளை தொடர்ந்து முருகப்பெருமான் உள்வீதி வலம் மற்றும் வெளிவீதி வலம் வந்து அடியவர்களுக்கு அருள் பாலித்தார்.யாழ்ப்பாணத்திலுள்ள இந்து ஆலயங்களில் நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு சிறப்பு நாட்களில் வழிபாட்டு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக இருப்பது வழக்கம்.
அதேபோன்று , இன்று மலர்ந்துள்ள சித்திரை வருடப்பிறப்பு வழிபாட்டுக்கு பல ஆயிரக்கணக்கான அடியவர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply