கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் வீடொன்றுக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தியதுடன் வீட்டு உரிமையாளர் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (12-04-2024) இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த நபர்கள் மது போதையில் வாள்கள் மற்றும் பொல்லுகளுடன் சென்று தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் கயமடைந்தவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Leave a Reply