யாழில் இடம்பெற்ற கோர விபத்து – அரச அதிகாரி பரிதாப உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் அரச அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்து சம்பவமானது நேற்று (11.4.2024) யாழ். கோப்பாய் – கைதடி வீதியில் இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்தில் தென்மராட்சிக் கல்வி வலய தொழில் வழிகாட்டல் ஆலோசனை அதிகாரியான, 56 வயதுடைய கணபதிப்பிள்ளை ஈஸ்வரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

பாடசாலை விளையாட்டு போட்டியில் கலந்து கொள்வதற்காக நேற்றைய தினம் வியாழக்கிழமை, கோப்பாய் – கைதடி வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வேளை எதிரே வந்த டிப்பர் வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து இவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் படுகாயமடைந்தவரை சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.