பொன்னாவெளி சுண்ணக்கல் போராட்டம் 270ஆவது நாளாக தொடர்கின்ற நிலையில் போராட்ட குழுவுடனும் மக்களுடனும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடாமல் சுண்ணக்கல் அகழ்வுக்கு அனுமதியை கொடுத்ததோடு வன்முறையையும் கையாண்டமை கண்டிக்கத்தக்கது என அனைத்து மக்கள் ஒன்றியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சரால் நேற்று (05) பொது மக்களுக்கு நிகழ்ந்த வன்முறை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “சுண்ணக்கல் அகழ்வுக்கு எதிராக போராட்டத்தை நாம் நிகழ்த்தும் போது அமைச்சர் டக்ளஸ் வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளிலிருந்து மக்களை வரவழைத்து எமக்கு எதிராக அராஜகத்தை ஏற்படுத்தியுள்ளார்.
அறவழிப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் ஏந்திய சுலோகங்களை கிழித்து, வாக்களித்த மக்களுக்கே அமைச்சர் வன்முறையை கையாண்டுள்ளார்
Leave a Reply