எதிர்வரும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போலி நாணயம் மற்றும் வழிப்பறி வியாபாரிகள் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.சிங்கள மற்றும்தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக மக்கள் பல்வேறு பொருட்களை அதிகளவில் கொள்வனவு செய்வதாக தெரிவித்த பொலிஸார், பல்வேறு கடத்தல்காரர்கள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமெனவும் எச்சரித்துள்ளனர்.
இதேவேளை, பண்டிகைக் காலங்களில் மக்கள் சுற்றுலா செல்ல வேண்டிய விதம் குறித்தும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விளக்கமளித்துள்ளார்.
Leave a Reply