கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.43 வயதான சுரேஷ் நித்தியானந்தன் ரொரன்ரோ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.Don Mills ரயில் நிலையத்திற்கு அருகில் பெண் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 30ஆம் திகதி ரயில் நிலையத்திற்கு அருகில் பெண் ஒருவரை கொடூரமாக தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சந்தேகநபருக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன. அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.
Leave a Reply