ஈழத்தமிழர்களையும் அவர்களுடைய விடுதலை போராட்டத்தையும் இழிவாக பேசிய பெண் ஒருவர் நடுவீதியில் வைத்து தாக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் புலம்பெயர்நாடுகளில் ஒன்றான பிரான்ஸில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,பிரான்ஸில் வசிக்கும் சுஜி என்ற இலங்கை தமிழ் பெண் தனது டிக் டொக் பக்கத்தில் ஈழத்தமிழர்களின் தலைவர் பிரபாகரன் பற்றியும் அவர்களது விடுதலைப் போராட்டம் பற்றியும் இழிவாக அநாகரிகமான வார்த்தைகளால் பேசி காணொளி பதிவிட்டுள்ளார்.இந்தநிலையில், இவரது காணொளியால் கோபமடைந்த அங்கு வசிக்கும் ஈழத்தமிழ் மக்கள் குறித்த பெண்ணை வீதியில் வைத்து சரமாரியாக தாக்கியுள்ளதுடன் முட்டைகளினாலும் அடித்துள்ளனர்
Leave a Reply