விசாரணை முடிந்து தாயகத்திற்க்குள் கால் வைத்த மூவர்!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் இலங்கையை வந்தடைந்துள்ள நிலையில் அவர்களிடத்தில் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் விசாரணை இடம்பெற்றது பின்னர் இரண்டு மணித்தியாலங்களின் பின்பு விசாரணை முடிவுற்றதும் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு விமானம் மூலம் இலங்கைக்கு திரும்பிய முருகன், ஜெயக்குமார் மற்றும் ரொபர்ட் பயஸ் ஆகியோர் இன்று காலை இலங்கையை வந்தடைந்திருந்தனர்.