யாழில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட 4 வாகனங்கள் பறிமுதல்!

யாழ். சாவகச்சேரிப்(Chavakachcheri) பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட 4 வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டள்ளன.

உரிய அனுமதிப் பத்திரங்கள் இன்றி மணல் ஏற்றிச் சென்ற குறித்த வாகனங்களின் சாரதிகளும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மறவன்புலோ-கோவிலாக்கண்டிப் பகுதியில் இன்று அதிகாலை சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த உழவியந்திரம் ஒன்றையும் – அதன் சாரதியையும் சாவகச்சேரிப் பொலிஸார் கைது செய்திருந்தனர்.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *