கணவரை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய மனைவி!

மதுபோதையில் வந்து மனைவியை நாளாந்தம் அடிக்கும் கணவனை அயலவர்களின் உதவியுடன் மின்கம்பத்தில் கட்டி வைத்து மனைவி உட்பட்ட சிலர் தாக்கியதில் அவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மாத்தறை வெலிகம பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது.உயிரிழந்தவர் 42 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,மாத்தறை, வெலிகம, கொஸ்கஹஹேன பிரதேசத்தில் வசிக்கும் கணவர், நேற்று இரவு மது போதையில் தனது வீட்டிற்கு வந்துள்ளார். மதுபழக்கத்திற்கு அடிமையான இவர், அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியை தாக்கியதால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

 

அதேபோன்று நேற்று இரவும் குடிபோதையில் வந்து மனைவியை தாக்க முயன்றார். இதன்போது மனைவி அயலவர்கள் சிலருடன் சேர்ந்து வீட்டின் முன் உள்ள மின்கம்பத்தில் கணவனை கட்டிப்போட்டுள்ளார்.