எரிபொருள் விலை குறைப்பு!

இன்று நள்ளிரவு (31) முதல் நடைமுறைக்கு  வரும் வகையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி 95 ஒக்டேன் பெட்ரோல் 7 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 440 ரூபாவாகும்.

மண்ணெண்ணெய் லீட்டருக்கு 12 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 245 ரூபாவாகும்.92 ஒக்டேன் பெட்ரோல் மற்றும் ஒட்டோ டீசல் விலை மாற்றமில்லை என இலங்கை பெட்ரோலியக்  கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.