வெடுக்குநாறிமலையில் கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பில் முறைப்பாடு!

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கைதான எட்டுப்பேரில் 6 பேர் இன்று கொழும்பிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமைக் காரியாலயத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரி மற்றும் சிறிலங்கா காவல்துறையினரது தமிழர்களுக்கு எதிரான இனவாத ஒடுக்குமுறைகளுக்கு துணைபோவதாக அமைந்துள்ள காரணத்தினாலேயே கொழும்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதனை தொடர்ந்து, கொழும்பிலுள்ள ஐநா அலுவலகத்தில் மனித உரிமை விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரியுடன் நேரில் சந்தித்து சிவராத்திரி தினத்தில் வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட அராஜகங்கள் மற்றும் கைதுகள் துன்புறுத்தல்கள் அடிப்படை வசதிகளற்ற சிறையில் அடைத்து வைக்கப்பட்டமை தொடர்பில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.